“அனைவரின் ஒப்புதலுடன் தான் ஜிஎஸ்டி வரி விதிப்பு...” - தமிழக அரசு பொறுப்புடன் பேச நிர்மலா சீதாராமன் அறிவுரை 

1 week ago 9

கோவை: “அமெரிக்காவில் இந்தியாவுக்கு எதிராக பேசி வரும் ராகுல் காந்தியின் செயலை காங்கிரஸ் கட்சி ஒத்துக்கொள்கிறதா? என, விளக்கம் கொடுக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது கமிட்டியில் உள்ள அனைத்து மாநிலங்களின் ஒப்புதலை பெற்ற பின்தான் அமல்படுத்தப்பட்டுள்ளது,” என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (செப்.12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “மத்திய பட்ஜெட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஏழு அம்சங்களில் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளோம். நாட்டில் உள்ள தொழில் நகரங்களுக்கு சென்று தொழில்முனைவோரை சந்திக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன். முதல்கட்டமாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு சென்றேன். நேற்று முன்தினம் கோவையில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். உணவு பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி குறித்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Read Entire Article