அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது: சீமான்

2 days ago 3

திருச்சி,

திருச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பீடு செய்யக்கூடாது. எனக்கும் கோபம் இருக்கிறது; அதற்காக தன்னைத்தானே சாட்டையில் அடித்துக் கொள்ளக்கூடாது. குற்றவாளியைதான் சாட்டையால் அடிக்க வேண்டும். தனது கோபத்தை சாட்டையால் அடித்து வெளிப்படுத்திய அண்ணாமலையை விமர்சிக்க முடியாது. செருப்பு அணிய மாட்டேன் என்றெல்லாம் அண்ணாமலை கூறியதை ஏற்க முடியாது.

35 வருட கட்சியான பாமகவில், நேற்றைய பிரச்சினை சரியாகிவிடும், வார்த்தை மோதல் குறித்து நான் கருத்து கூற முடியாது. அன்புமணிக்கு கூட தலைவர் பதவியை நம்பிக்கையின் அடிப்படையில் தான் ராமதாஸ் வழங்கி இருக்கிறார். அரசியலுக்கு வரும்போது பொதுவாகத்தான் ராமதாஸ் வந்தார். ராமதாசை காலம் சுருக்கிவிட்டது.

பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவியின் எப்.ஐ.ஆர். மட்டும் எப்படி வெளியானது. அது மிக கொடூரம். காவல்துறை முறையாக செயல்பட்டிருந்தால் நீதிமன்றம் ஏன் கண்டிக்கப் போகிறது. குற்றவாளி ஞானசேகரன் செல்போனை ஏரோபிளேன் மோடில் போட்டதை காவல்துறை எப்படி கண்டுபிடித்தது. பல்கலை. வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்பதை எப்படி நம்புவது?. இந்த சம்பவத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article