அசாம்: ரூ.12.7 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கைப்பற்றிய எல்லை பாதுகாப்பு படை

2 hours ago 2

 கவுகாத்தி,

இந்தியாவின் சர்வதேச எல்லைகள் வழியாக போதைப் பொருட்கள் மற்றும் பல்வேறு கடத்தல் போதைப்பொருளை கடத்துவதற்கான முயற்சிகள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இதனை தடுப்பதற்காக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து பீனைல், தங்கம் உள்ளிட்ட ரூ.12.7 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களைக் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்து எல்லை பாதுகாப்பு படை டிஐஜி ஹர்மீத் சிங் கூறியிருப்பதாவது ;

எல்லைப் படைகள் தங்கள் கடமைகளைச் செய்வதில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன மேலும் எல்லை பகுதியில் உள்ள மக்களுடன் நாங்கள் நல்ல உறவையும் கொண்டுள்ளோம். கடந்த ஜனவரி 1, முதல், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வங்காள தேசத்தை சேர்ந்த 35 நபர்களையும், இந்தியாவை சேர்ந்த 96 இந்திய கடத்தல்காரர்களையும் கைது செய்துள்ளனர். 

இதனிடையே அவர்களிடம் 6,8851 பன்செடைல் பாட்டில்களை கைப்பற்றியுள்ளனர் மேலும் 1,655 கிலோ கஞ்சா; 3,060.34 கிராம் தங்கம்; 1,0881 யாபா மாத்திரைகள்; இந்த காலகட்டத்தில் 1,0017 மதுபாட்டில்கள், 1.86 லட்சம் கிலோ சர்க்கரை போன்றவற்றை கைப்பற்றியுள்ளனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Read Entire Article