அசாம் மாநிலம் மோரிகான் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5ஆக பதிவு

3 hours ago 1

திஸ்பூர்: அசாம் மாநிலம் மோரிகான் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 2.25 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. அஸ்ஸாம் மாநிலம் மோரிகான் நகரை மையமாக கொண்டு 16 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குவாஹத்தி உள்ளிட்ட நகரங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி., கேமராக்களில் கட்டிடங்கள், வீடுகள், சாலையோர மின்கம்பங்கள் குலுங்கும் வீடியோ காட்சிகள் பதிவாகி இணையத்தில் வெளியாகி உள்ளன. அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை.

The post அசாம் மாநிலம் மோரிகான் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5ஆக பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article