அசாமில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு

4 hours ago 2

திஸ்பூர்,

அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வங்கக்கடலில் நேற்று முன்தினம் அதிகாலை 6.10 மணிக்கு ரிக்டர் 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article