ஃபெஞ்சல் புயல் | புதுச்சேரியில் காற்றுடன் பலத்த மழை; மீட்புப் பணியில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள்

3 hours ago 2

புதுச்சேரி: வங்கக்​கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்​சல்’ புயலாக வலுப்​பெற்றுள்ள நிலையில், இன்று இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக புதுச்சேரியில் இன்று காலை முதல் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

காற்றின் தாக்கத்தால், நகரின் ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன. இவற்றை தீயணைப்பு மற்றும் பொதுப்பணித்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழையினால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவற்றை அகற்றவும் அரசு துறைகள் தயார் நிலையில் உள்ளன. கடல் அலைகள் சீற்றம் காரணமாக பல மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பி ஆர்பரிக்கின்றன. முன்னெச்சரிக்கையாக இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாக்க பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Read Entire Article