10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

1 day ago 5

திருச்சி, செப்.26: தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பளியாளர்ககள் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளாவன: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ₹10 ஆயிரம் வழங்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அனைவருக்கும் நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொது விநியோகத்திட்டத்துக்கு தனித்துறை அமைக்க வேண்டும்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் திருத்தம் செய்து, அனைத்து மருத்துவமனைகளிலும், அனைத்து நோய்களுக்கும் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பளியாளர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

The post 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article